பதஞ்சலி நிறுவனரும், யோக குருவுமான பாபா ராம்தேவ், ஹரியானா மாநிலம் குருகுராமில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையிலான பாஜகவால் தான் மத்தியிலும், மாநிலங்களிலும் நிலையான ஆட்சியைத் தர முடியும்.
ஒரு நிலையான ஆட்சியே, மக்கள் ஆட்சியாகப் பார்க்கப்படும். நரேந்திர மோடி தலைமையிலான அரசு, காஷ்மீரில் இருந்த அரசியலமைப்பு சட்டம் 370-ஐ நீக்கி, அம்மக்களுக்கு நிரந்தர தீர்வை அளித்துள்ளது” என்று தெரிவித்தார்.
நானும் மனுஷன்தாங்க... எனக்கும் கோபம் வரும் - மனம் திறந்த தோனி
தொடர்ந்து பேசிய அவர், “ராமர் கோயில் அயோத்தியில் தான் நிறுவப்பட வேண்டும். இதற்கு பெரும் சவால்கள் சமூக அமைப்புகள் மூலம் வந்து நிற்கிறது. இந்த நெருக்கடியான சவால்களைக் களைந்து, அதனை செயல்படுத்தும் திறன் நரேந்திர மோடி, அமித்ஷா தலைமையிலான பாஜக அரசுக்கு உண்டு” எனக் கூறியுள்ளார்.