டெல்லி: பிரதமரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் நிருபேந்திர மிஸ்ராவின் தலைமையில் ராமர் கோயிலின் கட்டுமான குழு நேற்று ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையில் கோயில் கட்டுமான மாதிரிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது, புதிதாக கட்டப்படவுள்ள ராமர் கோயிலின் கீழ் சரயு ஆற்றின் நீரோடை உள்ளதால், கோயிலின் கட்டுமான பணிகளுக்குப் புதிய மாதிரிகளைக் கட்டுமான குழு பரிந்துரைக்க வேண்டும்.
எனவே, கோயிலின் அடித்தளத்திற்கு ஏற்றதுபோல் சிறந்த மாதிரிகளைப் பரிந்துரைக்குமாறு இந்திய தொழில்நுட்ப நிறுவனத்திடம் ராமர் கோயில் அறக்கட்டளை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தக் கோயில் 2023ஆம் ஆண்டிற்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் கட்டுமான குழு வைப்ரோ கல் நெடுவரிசைகளைப் பயன்படுத்தி கோயிலைக் கட்டுவதா அல்லது பொறியியல் கலவையைச் சேர்ப்பதன் மூலம் மண்ணின் தரத்தையும் பிடியையும் மேம்படுத்தி கோயிலைக் கட்டுவதா என ஆலோசித்துவருகிறது.
இதையும் படிங்க: கர்நாடகா; அயோத்தி ராமர் கோயில் நிதி திரட்டும் பணியில் 5 லட்சம் தொண்டர்கள்!