பாதுகாப்புத் துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, கிழக்கு லடாக்கில் ஷியோக் ஆற்றின் மீது கட்டப்பட்ட பெரிய பாலம் ஒன்றை திறந்துவைத்தார்.
இதைத்தொடர்ந்து அருணாச்சலப் பிரதேசத்தில் மற்றொரு முக்கியமான பாலத்தை இன்று திறந்துவைத்துள்ளார். சிசிரி ஆற்றின் மீது உள்ள சிசார் பாலம் கிழக்கு சியாங், லோயர் திபாங் பள்ளத்தாக்கு ஆகிய இரு மாவட்டங்களையும் நேரடியாக இணைக்கும்.
இந்தப் பாலம் கட்டப்படும் முன்னதாக, உள்ளூர்வாசிகள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணிக்க அஸ்ஸாம் வழியாக நீண்ட சுற்று வழியைப் பயன்படுத்திவந்தனர். இதுமட்டுமின்றி இந்தப் பாலம் ராணுவ கண்ணோட்டம் வாயிலாகவும் பலம் வாய்ந்தது.
சீனா உள்ளிட்ட அண்டை நாட்டைச் சேர்ந்தவர்கள் ஏதேனும் படையெடுப்பு நடத்தினால்கூட இந்தப் பாலத்தின் வழியாக ராணுவ பொருள்களை விரைந்து எடுத்துச் செல்ல முடியும்.
அஸ்ஸாமில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டோலா-சாதியா பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். அப்போது சீனா தனது அதிருப்தியை தெரிவித்தது. இதற்கு பதிலளித்த இந்தியா, பிராந்திய விவகாரத்தில் கட்டுப்படுத்தப்பட்ட அணுகுமுறையை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டது. இருப்பினும் இதனை ஏற்க சீனா மறுத்தது.
எனினும் சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சில பகுதிகளை சொந்தம் கொண்டாடுவதை நிறுத்தவில்லை. அருணாச்சலப் பிரதேசத்தில் சாலை, பாலம் மேம்பாட்டு அவசரத்திற்கு பின்னால் மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.
இதையும் படிங்க: கேப்டன் அமரீந்தர் சிங்குடன் இம்ரான் கான் என்ன பேசினார்?