ETV Bharat / bharat

முப்படைகளின் தலைமை தளபதியை சந்திக்கும் ராஜ்நாத் சிங் - முப்படைகளின் தலைமை தளபதி

டெல்லி: முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தை சந்திக்க உள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எல்லை பகுதிகளின் பாதுகாப்பு நிலவரம் குறித்து கேட்டறியவுள்ளார்.

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்
author img

By

Published : Jul 10, 2020, 4:58 PM IST

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தை சந்திக்க உள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எல்லை பகுதிகளின் பாதுகாப்பு நிலவரம் குறித்து கேட்டறியவுள்ளார். இந்தியா, சீனா நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவரும் நிலையில், இச்சந்திப்பு நடைபெறவுள்ளது. இச்சந்திப்பின்போது முப்படை தளபதிகளும் கலந்துகொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை பேணி காக்க இந்தியா உறுதியாக உள்ளது என தெரிவித்த வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, "சிறப்பு பிரதிநிதிகள் அஜித் தோவல், வாங் யி சந்திப்பின்போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ராஜாங்க, ராணுவ ரீதியான பிரச்னையை தீர்க்க இரு தரப்பு உயர் அலுவலர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவர்.

மோதலை தவிர்க்கும் நோக்கிலான ராணுவ திரும்பபெறும் நடவடிக்கை சுமூகமாக தொடர இப்பேச்சுவார்த்தைகள் உதவும். இந்திய, சீன எல்லை விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் ஆலோசனைக்கான செயல் திட்டத்தின் கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது" என்றார். ராணுவ திரும்பபெறும் நடவடிக்கையின் முதல் கட்டம் கிழக்கு லடாக் பகுதியில் நிறைவடைந்துள்ளது.

படைகள் திரும்ப பெறுவதற்கான நடவடிக்கையின் இரண்டாவது கட்டம் அடுத்த சில நாள்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவம் மோதிக் கொண்டதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். தங்களது தரப்பிலும் உயிரிழப்பு நிகழ்ந்ததாக சீனா ஒத்துக்கொண்டது.

இதனிடையே, கிழக்கு லடாக் பகுதியில் 20,000 ராணுவ வீரர்களையும் ,வடக்கு சிஞ்சியாங் பகுதியில் 10,000 ராணுவ வீரர்களையும் சீனா குவித்துள்ளதாக, அரசு தரப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன. இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையே தொடர் பதற்றம் நிலவிவந்தது. பதற்றத்தை குறைக்கும் நோக்கில், உயர்மட்ட ராணுவ அலுவலர்கள், அமைச்சர்கள் ஆகியோர் பேச்சுவார்த்தையில் இறங்கினர்.

இதன் தொடர்ச்சியாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினர். இதன் விளைவாக, எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தைத் திரும்பப் பெறுவதாக இருநாடுகளும் ஒத்துக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தேர்வுகளை ரத்து செய்ய ராகுல் காந்தி வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.