இந்திய எல்லைப் பகுதியை பலப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு கடந்த சில மாதங்களாக எல்லைப் பகுதியிலுள்ள சாலைகளைச் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டுவந்தது. இதற்கிடையில், சீன ராணுவத்தினர் சிலர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாலும், கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் இருபது வீரர்கள் உயிரிழந்ததாலும் இந்திய-சீன எல்லைப் பகுதியில் பதற்றம் நீடித்துவருகிறது.
இதையடுத்து, சில நாள்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி, எல்லைப் பகுதிகளை பார்வையிட்டு, அங்குள்ள வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். இந்நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய தலைநகர் பகுதியில் உள்ள தெற்கு பகுதியில், அரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் எல்லை சாலைப் பணிகள் குறித்து எல்லை சாலை அமைப்பினர் மற்றும் முக்கிய அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்தக் கூட்டத்தில், எல்லை சாலை அமைப்பின் துணைநிலைத் தலைவர் ஹர்பல் சிங், பாகிஸ்தான் எல்லைப் பகுதியான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் நடைபெற்றுவரும் சாலைப் பணிகள் குறித்து ராஜ்நாத் சிங்கிற்கு விளக்கினார்.