ETV Bharat / bharat

பாலக்கோட்  தாக்குதல் விவகாரத்தில் காங்கிரஸ் அமைதி காக்கிறது - ராஜ்நாத் சிங்

பாட்னா: பாலக்கோட் விவகாரம் குறித்து பாகிஸ்தான் ஒப்புக்கொண்ட நிலையிலும் காங்கிரஸ் அமைதி காத்துவருவதாக ராஜ்நாத் சிங் விமர்சனம் செய்துள்ளார்.

Rajnath
Rajnath
author img

By

Published : Oct 31, 2020, 4:45 PM IST

பாலக்கோட் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய விமானி அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தான் எல்லையில் சிக்கிக்கொண்டார்.

பின்னர், அவரை பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தது. ஆனால், அபிநந்தனை ஒப்படைத்ததற்கு காரணம் இந்தியாவின் அழுத்தம்தான் என பாகிஸ்தான் எம்.பி. நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மௌனம் காப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சனம் செய்துள்ளார்.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வைசாலி பகுதியில் ராஜ்நாத் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது, பேசிய அவர், "நாட்டின் பாதுகாப்பைக் கருதி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை சிலர் எதிர்க்கின்றனர். தாக்குதல் நடத்தியிருப்பதாக பாகிஸ்தான் ஒப்புக் கொண்டபோது காங்கிரஸ் போராட்டம் நடத்தியது.

ஆனால், இந்தியாவின் அழுத்தத்தின்பேரில்தான் அபிநந்தனை விடுவித்ததாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் அமைதி காத்துவருகிறது.

காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளை 50 விழுக்காடு நிறைவேற்றி இருந்தாலும் நாட்டின் போக்கு மாறி இருக்கும். ஆனால், நாங்கள் வாக்குறுதி அளித்த அனைத்தையும் நிறைவேற்றுகிறோம்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.