ETV Bharat / bharat

ஃபிரான்ஸ் அதிபருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு!

பாரீஸ்: ஃபிரான்ஸ் நாட்டிற்குச் சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அந்நாட்டு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

Rajnath Singh
author img

By

Published : Oct 8, 2019, 4:46 PM IST

Latest International News பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஃபேல் விமானங்களைப் பெற மூன்று நாள் அரசு முறை பயணமாக ஃபிரானஸ் சென்றுள்ளார். இந்நிலையில், அந்நாட்டு அதிபர் இமானுவேல் மக்ரோனை அவர் இன்று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த சந்திப்புக்குப் பின் ராஜ்நாத் சிங், பாரீஸிலிருந்து ஃபிரான்ஸ் ராணுவ விமானத்தில் மெரிக்னாக் நகருக்குச் செல்கிறார். அங்கு, அவர் பிரெஞ்சு பாதுகாப்புத்துறை அமைச்சர் புளோரன்ஸ் பார்லியுடன் ரஃபேல் போர் விமானம் ஒப்படைக்கும் விழாவில் பங்கேற்கவுள்ளார்.

அப்போது அவரிடம் இந்தியாவுக்காகத் தயாரிக்கப்பட்ட முதல் ரஃபேல் போர் விமானம் ஒப்படைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. பின்னர், அங்கு சரஸ்வதி பூஜையையும் ராஜ்நாத் சிங் நடத்தவுள்ளார்.

  • Raksha Mantri Shri @rajnathsingh has reached the Elysée Palace to call on the President of France @EmmanuelMacron.

    He is meeting the Minister for the Armed Forces, Ms Florence Parly and the Defence Advisor to the French President, Admiral Bernard Rogel. pic.twitter.com/pBK4oIA74l

    — रक्षा मंत्री कार्यालय/ RMO India (@DefenceMinIndia) October 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த நிகழ்வுக்குப் பின், ரஃபேல் போர் விமானம் அதிகாரப்பூர்வமாக இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுவிட்டது என்றாலும், இந்திய விமானிகளுக்கு போதிய பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர் மே 2020இல் இருந்துதான் ரஃபேல் விமானங்கள் இந்தியாவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: 49 பேர் மீது தேச துரோக வழக்கு - பிரதமருக்கு கடிதம் எழுதிய சசி தரூர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.