ETV Bharat / bharat

மோடி பதவியேற்பு விழா - ரஜினிகாந்துக்கு பாஜக அழைப்பு - Rajinikanth invited

நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மோடி -ரஜினிகாந்த்
author img

By

Published : May 27, 2019, 1:18 PM IST

நடந்து முடிந்த 17ஆவது மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, சுமார் 4.79 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்நிலையில் இரண்டாவது முறையாக தன்னை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுத்த வராணராசி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி இன்று வாரணாசிக்கு பயணம் செய்துள்ளார். வாரணாசி சென்றுள்ள மோடி காசிநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். வழிநெடுகிலும் மக்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

மேலும், 17ஆவது மக்களவைத் தேர்தலில் 303 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. வருகின்ற 30ஆம் தேதி இரவு ஏழு மணிக்கு இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், பதவியேற்பு விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்திற்கு நட்பு ரீதியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'தர்பார்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக இன்று மும்பை செல்லும் ரஜினிகாந்த் மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், மோடி பதவியேற்பு விழாவில் உலக நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாஜக அமோக வெற்றி பெற்றதற்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டர் மூலம் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

Rajinikanth invited for PM modi swearing ceremony

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.