சாரதா நிதி முறைகேடு வழக்கு மேற்கு வங்க அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பிவருகிறது. திருணாமுல் காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் இவ்வழக்கில் சிக்கினர். இந்த வழக்கை அப்போது கொல்கத்தா காவல் ஆணையராக இருந்த ராஜீவ் குமார் விசாரித்து வந்தார். ராஜீவ் குமார் இந்த வழக்கு குறித்த தகவல்களை சிபிஐயிடம் சரியாக தெரிவிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
பிறகு ராஜிவ் குமார் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு சோதனை செய்தது. சோதனை நடத்தும்போது வீட்டில் ராஜீவ் குமார் இல்லை. இந்நிலையில், ராஜீவ் குமார் இன்று மத்திய புலனாய்வு அமைப்பு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.