ETV Bharat / bharat

'ஆறு மாதங்களாக பாஜகவுடன் சேர்ந்து செயல்படும் பைலட்' - பகீர் கிளப்பும் கெலாட் - ஆறு மாதங்களாக பாஜகவுடன் சேர்ந்து செயல்படும் பைலட்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து பைலட் ஆறு மாதங்களாகச் சதி செய்துவருவதாக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கெலாட்
கெலாட்
author img

By

Published : Jul 20, 2020, 7:54 PM IST

ராஜஸ்தானில் நொடிக்கு நொடி அரசியல் திருப்பம் அரங்கேறிவருகிறது. மாநிலத்தின் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும் துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் நீண்ட நாள்களாக நிலவிவந்த பனிப்போர், சில நாள்களுக்கு முன் கடும் மோதலாக வெடித்தது. இதனால், பைலட் மாநிலத்தின் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்தும், துணை முதலமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார். பைலட் மூலம் ராஜஸ்தானில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக திட்டம் தீட்டிவருவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டிவருகிறது. ஆனால், பாஜக இதனை மறுத்துவருகிறது.

இதனிடையே, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், பைலட்டின் ஆதரவாளர்களான பன்பர் லால் சர்மா, சஞ்சய் ஜெயின் ஆகியோருடன் எம்எல்ஏக்களை பாஜக பக்கம் இழுப்பது தொடர்பாக பேரம் பேசிய ஆடியோவை வெளியிட்டு காங்கிரஸ் பரபரப்பைக் கிளப்பியது. இதையடுத்து மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து ராஜஸ்தான் மாநில காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர். இந்நிலையில், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து பைலட் ஆறு மாதங்களாகச் சதி செய்துவருவதாக அம்மாநில முதலமைச்சர் கெலாட் சரமாரி விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

கெலாட் விமர்சனம்

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "பைலட், அப்பாவி முகத்தை வைத்துக்கொண்டு இம்மாதிரியான வேலைகளைச் செய்வார் என ஒருபோதும் நினைத்ததில்லை. மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த அவர் ஒரு வேலையும் செய்யவில்லை. அப்போதுகூட, யாரும் அவரை நோக்கி கேள்வி கேட்கவில்லை. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து பைலட் ஆறு மாதங்களாக சதி செய்துவருகிறார். காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டார்" என்றார்.

ஆடியோ விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், எம்மாதிரியான விசாரணைக்கும் தயார் என கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் ஷெகாவத்தின் குரல் மாதிரியைப் பதிவுசெய்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள ராஜஸ்தான் காவல் துறை முடிவுசெய்துள்ளது.

இதையும் படிங்க: பாபர் மசூதி விவகாரம்: ஜூலை 24இல் அத்வானி வாக்குமூலம் அளிக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.