ETV Bharat / bharat

டெல்லியில் பாசிட்டிவ்... ராஜஸ்தானில் நான்கு முறையும் நெகட்டிவ்;- ஐசிஎம்ஆரிடம் கேள்வி எழுப்பிய எம்பி! - ராஜஸ்தானில் நான்கு முறையும் நெகட்டிவ் ரிசல்ட் வந்த ராஜஸ்தான் அமைச்சர்

நாடாளுமன்றத்திற்குள் அனுமதியளிக்கும் பரிசோதனையில் கரோனா தொற்று உறுதியான நாகூர் அமைச்சருக்கு, ராஜஸ்தானில் நான்கு முறை கரோனா பரிசோதனை மேற்கொண்டும் நெகட்டிவ் வந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

hanu
hanu
author img

By

Published : Sep 18, 2020, 7:30 PM IST

ஜெய்ப்பூர்: நாடாளுமன்றத்திற்குள் அனுமதியளிக்கும் பரிசோதனையில் கரோனா தொற்று உறுதியான நாகூர் அமைச்சருக்கு, ராஜஸ்தானில் நான்கு முறை கரோனா பரிசோதனை மேற்கொண்டும் நெகட்டிவ் வந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. வைரஸ் தடுப்பு பணியில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். சமீபத்தில் தொடங்கியுள்ள நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத் தொடரில் கலந்துக் கொள்ள வந்த எம்பிக்களில், மொத்தம் 23 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அவர்களுக்கு நாடாளுமன்றத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்றத்திற்கு அனுமதியளிக்கும் பரிசோதனையில் கரோனா பாதிப்பு உறுதியான நாகூர் அமைச்சர் ஹனுமான் பெனிவாலுக்கு ராஜஸ்தானில் நான்கு முறை பரிசோதனை செய்தும் தொற்று இல்லை என ரிசல்ட் வந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஹனுமான் பெனிவால் கூறுகையில், " இது எனது ஐந்தாவது கரோனா பரிசோதனை ஆகும். இம்முறை பிரபல தனியார் ஆய்வகத்தில் சோதனை மேற்கொண்டேன். ஆனால், அப்போதும் கரோனா தொற்று இல்லை என்ற ரிசல்ட் வந்துள்ளது. எதற்கு டெல்லியில் எனக்கு கரோனா தொற்று உள்ளது என ரிசல்ட் வழங்கிய ஐசிஎம்ஆர் தெளிவுபடுத்த வேண்டும்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதும் நான் வீட்டுத் தனிமைப்படுத்தலில் நேரத்தை செலவிட்டிருப்பது வருத்தமளிக்கிறது. ‌எனது மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் குரல் ஏழுப்ப முடியாமல் போய்விட்டது. இப்பிரச்னையில் குறித்து விரிவான அறிக்கையை ஐசிஎம்ஆர் வெளியிட வேண்டும்.

இதுதொடர்பாக ஏன் சுகாதார அமைச்சகம் அமைதியாக உள்ளது" என கேள்வி ஏழுப்பினார். மேலும், ஹனுமான் உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், தர்மேந்திர பிரதான் ஆகிய இருவரும் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்ததாக கூறப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.