ETV Bharat / bharat

ராஜஸ்தானில் மின் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி!

ஜெய்ப்பூர்: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மின் ஊழியர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மின் ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bundi news  rajasthan news  suicide  suicide attempt  Rajasthan suicide news  suspend  Rajasthan man attempts suicide  Job loss suicide  மின் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி  மின் ஊழியர்  ராஜஸ்தானில் மின் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி!
suicide attempt
author img

By

Published : May 21, 2020, 6:29 PM IST

ராஜாஸ்தான் மாநிலம் பூண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜித். இவர் மின்சாரத் துறையில் தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அஜித் தனது சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சக ஊழியர்கள் மேல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.

அதனடிப்படையில், மேல் அலுவலர் அஜித்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனால், மனமுடைந்த அஜித் விஷம் குடித்து சாலையில் விழுந்து கிடந்துள்ளார். இதைக் கண்ட காவல் துறையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விஷம் குடிப்பதற்கு முன்பு அஜித் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.

அதில், "நான் அனைவரிடமும் அன்பாக தான் இருக்கிறேன். இருப்பினும் என் மீது அனைவரும் வெறுப்பை காட்டுகிறார்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை. எனது வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் மின் ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: காதலனை கரம் பிடிக்க நினைத்த மாணவி... போக்சோவில் சிக்கவைத்த சோகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.