சஞ்சீவானி கடன் கூட்டுறவு சங்கத்தில் முதலீட்டாளர்களுக்கு எவ்வித வருவாயும் கிடைக்காத நிலையில், சங்கத்தில் பெரும் தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறி வழக்கறிஞர்கள் அமித் குமார் புரோஹித் மற்றும் மதுசூதன் புரோஹித் ஆகியோர் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். மேலும், சஞ்சீவானி பாதிக்கப்பட்டவர்கள் சங்கம் சார்பாகவும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “ இந்த கூட்டுறவு சங்கத்தில் போலி பதிவுகள் மற்றும் சுவரொட்டிகளைக் கொண்டு முதலீட்டாளர்களை ஈர்த்து பெருமளவு தொகையில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இந்த விவகாரத்தை அமலாக்கத்துறை, தீவிர மோசடி விசாரணை அலுவலகம் (எஸ்.எஃப்.ஐ.ஓ), மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ) ஆகியவை விசாரித்து, பாதிப்படைந்த முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்பக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று கோரியிருந்தனர்.
இந்நிலையில், தற்போது இந்த வழக்கில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் அவரது மனைவி நௌனந்த் கன்வார் உள்ளிட்ட 15 பாஜகவினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கேரள தனியார் விடுதியில் போதை மருந்துடன் ஆபாச நடனம் : 9 பேர் கைது