ETV Bharat / bharat

'ஆபாச காணொலிகளைப் பகிர்ந்து சர்ச்சையில் சிக்கினாரா பாஜக மூத்தத் தலைவர்?'

author img

By

Published : Jun 25, 2020, 1:39 AM IST

பாஜக மூத்தத் தலைவரும், ராஜஸ்தான் முன்னாள் அமைச்சருமான கலு லால் குர்ஜருக்கு சொந்தமான அலைபேசி எண் மூலம் பல வாட்ஸ்அப் குழுக்களில் மோசமான காணொலிகள் பரப்பப்பட்டன. எவ்வாறாயினும், தனது அரசியல் போட்டியாளர்கள் தனது செல்வாக்கை கெடுக்கும் சதித்திட்டத்தை தீட்டியதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Rajasthan bjp leader
Rajasthan bjp leader

பில்வாரா (ராஜஸ்தான்): பாஜக மூத்தத் தலைவரும், ராஜஸ்தான் முன்னாள் அமைச்சருமான கலு லால் குர்ஜருக்கு சொந்தமான அலைபேசி எண் மூலம் பல வாட்ஸ்அப் குழுக்களில் ஆபாசமான காணொலிகள் பரப்பப்பட்டன.

எவ்வாறாயினும், தனது அரசியல் போட்டியாளர்கள் தனது செல்வாக்கை கெடுக்கும் சதித்திட்டத்தை தீட்டியதாக கலு லால் குர்ஜர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கட்சிக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில், இந்தச் செயல்பாடு உள்ளதாக பலதரப்பட்ட கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது கலு லால் குர்ஜர் அலைபேசி எண்ணில் இருந்து, வாட்ஸ்அப் செயலி மூலம் பல குழுக்களுக்கு இந்த காணொலிகள் அனுப்பப்பட்டுள்ளன.

'இப்படியான காணொலிகள் பகிரப்பட்டது என்று எனக்கு அழைப்பு வந்தபோது, என் கைபேசியை சோதனை செய்து பார்த்தேன். அப்போது அது உண்மையெனத் தெரிந்தது.

உடனடியாக குழுக்களில் உள்ள காணொலிகளை அழித்துவிட்டேன். இது யாரோ எனக்குத் தெரியாமல் செய்த சதி வேலை என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. என் அரசியல் செல்வாக்கை கெடுப்பதற்காகவே இம்மாதிரியான செயல்களை செய்துள்ளனர்' என்று கலு லால் குர்ஜர் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.