ETV Bharat / bharat

ராஜஸ்தான் பாஜக தலைவர் மதன்லால் சைனி காலமானார்! - மதன் லால் சைனி காலமானார்

டெல்லி: ராஜஸ்தான் பாஜக மாநிலத் தலைவர் மதன்லால் சைனி (75) உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவனையில் காலமானார். மோடி உட்பட பாஜக தலைவர்கள் பலர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மதன் லால் சைனி
author img

By

Published : Jun 25, 2019, 7:40 AM IST

மாநிலங்களவை எம்.பி.யும் ராஜஸ்தான் பாஜக மாநிலத் தலைவருமான மதன்லால் சைனிக்கு (75) கடந்த சில நாட்களுக்கு முன் நுரையீரலில் தொற்று ஏற்பட்டு ஜெய்ப்பூரில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவந்தார். நோய் தொற்றின் தீவிரம் அதிகரித்ததால் கடந்த சனிக்கிழமையன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று மாலை 7 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள் துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உட்பட பல பாஜக தலைவர்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

இன்று நடைபெறும் மக்களவைக் கூட்டத் தொடரின் அவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்படும் எனத் தெரிகிறது.

மதன்லான் சைனி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர். இவர் ஆரம்பக் காலங்களில் ஆர்.எஸ்.எஸ்.இல் இணைந்து பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

Delhi: Union Home Minister Amit Shah and BJP National Working President Jagat Prakash Nadda reach AIIMS. Rajasthan BJP chief Madan Lal Saini passed away at the hospital today.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.