ETV Bharat / bharat

'மோடி ஜிந்தாபாத், ஜெய் ஸ்ரீராம்' கூற மறுத்த ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல்! - Rajasthan latest news

ஜெய்ப்பூர்: ’மோடி ஜிந்தாபாத், ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷமிட மறுத்ததால் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

Auto driver assaulted for not chanting Jai Shri Ram

author img

By

Published : Aug 9, 2020, 10:48 AM IST

ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கஃபார் அகமது கச்சாவா. ஆட்டோ ஓட்டுநரான இவர் நேற்று முன்தினம் (ஆக.07) அதிகாலை 4 மணியளவில் அருகில் இருந்த கிராமத்திற்கு தனது ஆட்டோவில் ஒருவரை அழைத்துச் சென்று, அங்கு இறக்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் கஃபாரின் ஆட்டோவை மறித்து, அவரிடம் புகையிலை கேட்டுள்ளனர். இதையடுத்து, கஃபார் தன்னிடமிருந்த புகையிலையை அவர்களிடம் கொடுத்துள்ளார். ஆனால், புகையிலையை வாங்க மறுத்த அவர்கள், கஃபாரை ’மோடி ஜிந்தாபாத், ஜெய் ஸ்ரீராம்’ என்று கூற சொல்லி வற்புறுத்தியுள்ளனர். ஆனால், அதற்கு கஃபார் மறுக்கவே, இருவரும் சேர்ந்து கஃபாரை தாக்கியுள்ளனர்.

இதையடுத்து, கஃபார் தன்னுடைய ஆட்டோவை எடுத்துக்கொண்டு அங்கிருந்த தப்பமுயன்றுள்ளார். இருப்பினும், அவர்கள் தங்கள் வாகனத்தை எடுத்துக்கொண்டு கஃபரை துரத்தியுள்ளனர். ஜக்மல்பூரா என்ற பகுதியில் ஆட்டோவை இடைமறித்து, கஃபாரை ஆட்டோவிலிருந்து கீழே இறக்கிய அவர்கள், ஜெய் ஸ்ரீராம், மோடி ஜிந்தாபாத் என்று கூறுமாறு மீண்டும் அவரை கட்டாயப்படுத்தியுள்ளனர்.

'மோடி ஜிந்தாபாத்' கூற மறுத்ததால் தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்
தாக்குதலில் ஈடுபட்டவர்கள்

ஆனால், கஃபார் அவ்வாறு கூற மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், கஃபாரின் தாடியைப் பிடித்து இழுத்துள்ளனர். மேலும், அவரை கொடூரமாகத் தாக்கத் தொடங்கினர். இதில் அவரது முன் பற்கள் உடைந்து, இடது கண் பகுதியில் பலத்தக் காயம் ஏற்பட்டது.

இதன் பின் கஃபாரிடமிருந்து கடிகாரம், பணத்தை பறித்துக்கொண்டு இருவரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதுதொடர்பாக சிகார் சதார் காவல் நிலையத்தில் கஃபார் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் ஷம்பு தயால் (35), ராஜேந்திர ஜாட் (33) ஆகிய இரண்டு நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், இருவரும் குடிபோதையில் தவறு செய்துவிட்டதாக காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் இருந்து பணத்தையும், கடிகாரத்தையும் பறிமுதல் செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'மத பரப்புரையாளர் ஜாகிரை ஏற்க எந்த நாடும் முன்வரவில்லை' - மகாதீர் பின் முகமது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.