ஐந்தாவது ரைசினா மாநாடு டெல்லியில் நேற்று (ஜூன் 14) தொடங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம், பருநிலை மாற்றம் உள்பட பல்வேறு சர்வதேச சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இந்த மாநாட்டின் தொடக்க நாளில் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் டென்மார்க் பிரதமரும் முன்னாள் நாட்டோ (NATO) பொதுச்செயலாளருமான ஆண்டர்ஸ் ராஸ்முசென் உள்பட பல முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டில் பேசிய ஆண்டர்ஸ், "சர்வதேச அளவில் மக்களை ஒடுக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் சர்வதேச அளவில் ஒரு கூட்டணியை கட்டமைக்க வேண்டும். அத்தகைய கூட்டணியில் இந்தியா ஒரு முக்கியப் பங்கை வகிக்கக்கூடும்" என்றார்.
இந்த மாநாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் பங்கேற்பதாக இருந்தது, ஆனால் ஆஸ்திரேலிய காட்டுத்தீயால், அவரது நான்கு நாள் இந்தியப் பயணம் கடைசி நேரத்தில் ரத்துசெய்யப்பட்டது. இருப்பினும் ஆஸ்திரேலியா பிரதமர் தனது கருத்துகளை காணொலி மூலம் அனுப்பியிருந்தார். அதில், "இந்தோ-பசிபிக் என்ற சொல்லாடலே இப்பகுதியில் இந்தியாவின் சக்தியை குறிக்கிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில், இந்தியா தனது பங்கை கணிசமாக அதிகரித்துள்ளது" என்றார்.
நேற்று நடைபெற்ற தொடக்க நிகழ்வில் நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஹெலன் கிளார்க், ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய், கனடா முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், ஸ்வீடன் முன்னாள் பிரதமர் கார்ல் பில்ட், பூட்டான் முன்னாள் பிரதமர் ஷெரிங் டோப்கே, தென்கொரிய முன்னாள் பிரதமர் ஹான் சியுங்-சூ உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டின் தொடக்க நிகழ்வில் உலகமயமாக்கல், 2030ஆம் ஆண்டுக்கான திட்டம், நவீன உலகில் தொழில்நுட்பத்தின் பங்கு, பருவநிலை மாற்றம் உள்ளிட்டவற்றைப் பற்றி விவாதிக்கப்பட்டன. மேலும், ஈரான் ரகசிய பாதுகாப்புப் படைத் தளபதியும் மிகவும் சக்திவாய்ந்த நபருமான காசிம் சுலைமானியை அமெரிக்கா கொன்றது குறித்தும், இரு நாடுகளுக்கு இடையே உள்ள போர் பதற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பேசிய கனடா முன்னாள் பிரதமர் ஹார்பர், "ஈரான் அரசில் ஒரு மாற்றம் கண்டிப்பாக நிகழ வேண்டும். அப்போதுதான் மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி ஏற்படும். பருவநிலை மாற்றத்தை இலக்குகளை வைத்து மட்டும் எதிர்கொள்ள முடியாது. வளர்ச்சியைத் தரும் மாசை வெளிப்படுத்தாத தொழில்நுட்பம் நமக்கு வேண்டும்" என்றார்.
-
Attended the @raisinadialogue in New Delhi. Over the years, this has emerged as a vibrant forum for discussing important global and strategic issues. I also had the opportunity to meet leaders who are great friends of our nation. pic.twitter.com/hlVk2RRXkw
— Narendra Modi (@narendramodi) January 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Attended the @raisinadialogue in New Delhi. Over the years, this has emerged as a vibrant forum for discussing important global and strategic issues. I also had the opportunity to meet leaders who are great friends of our nation. pic.twitter.com/hlVk2RRXkw
— Narendra Modi (@narendramodi) January 14, 2020Attended the @raisinadialogue in New Delhi. Over the years, this has emerged as a vibrant forum for discussing important global and strategic issues. I also had the opportunity to meet leaders who are great friends of our nation. pic.twitter.com/hlVk2RRXkw
— Narendra Modi (@narendramodi) January 14, 2020
மற்ற நாடுகள் தனது கருத்துகளை பின்பற்ற அமெரிக்கா இணங்க வைக்க முடியாது என்று ஆப்கன் முன்னாள் அதிபர் தெரிவித்தார்.
மூன்று நாள்கள் நடக்கவுள்ள இந்த மாநாட்டில் ரஷ்யா, ஈரான், ஆஸ்திரேலியா, மாலத்தீவு, தென் ஆப்ரிக்கா, டென்மார்க் உள்பட 12 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். காசிம் சுலைமானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்படும் மாநாடாக இந்த மாநாடு உள்ளதால், சர்வதேச அளவில் ரைசினா மாநாடு முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: 'பிரித்தாலும் சூழ்ச்சியைக் கைவிடுங்கள் மோடி' - காங்கிரஸ்