சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் வசித்துவரும் ரித்திகா சவ்தா என்ற மாணவி இளங்கலை வணிகம் படித்துவருகிறார்.
இவர் சீனப் பொருள்கள் புறக்கணிப்பில் தனது பங்கிற்காக இந்தாண்டு ரக்ஷ பந்தனுக்காக ராக்கிகளை தானே தயாரித்துவருகிறார். அதுமட்டுமல்லாமல் அவர் அதனை ஆன்லைன் மூலம் விற்பனை செய்துவருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதனால் நாடு முழுவதும் சீனாவிற்கும் சீனப் பொருள்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதில் எனது பங்கிற்காக நான் இந்த ரக்ஷ பந்தனுக்காக கைவிணை ராக்கிகளை தயாரித்துவருகிறேன்.
அதனை விற்பனையும் செய்துவருகிறேன். தேசிய தாயாரிப்புகளை ஊக்குவிக்கும் எனது முயற்சிக்கு பலர் ஆதரவளித்துவருகின்றனர். ராக்கிகள் தயாரிக்க நான் தேக்கு மரப் பட்டை, பருத்தி நூல்கள் மற்றும் கூலாங் கற்களைப் பயன்படுத்துகிறேன். அதன் விலை ரூ.40 முதல் ரூ.150 வரை இருக்கும். ஊரடங்கு காரணமாக எனக்கு இந்தப்பணியில் அதிக நேரம் செலவிட கிடைத்தது"எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்திய - சீன எல்லைப் பிரச்னை: சீனப் பொருட்கள் இறக்குமதியில் கடும் சரிவு!