ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் 48 பேர் வெள்ளத்தில் பலி : ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிப்பு - கர்நாடாக வெள்ளம்

கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்கள் வெள்ளத்தில் இருந்து மீளத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என அம்மாநில முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

PM Modi calls for flood meet
மகாராஷ்டிராவில் 48 பேர் வெள்ளத்தால் உயிரிழப்பு; ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிப்பு
author img

By

Published : Oct 17, 2020, 9:25 AM IST

டெல்லி : கர்நாடாகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பெய்த மழையால் அவ்விரு மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கர்நாடாகவில் பெய்த மழையாலும், பெரும்பாலான அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் நேற்று (அக்.16) அம்மாநிலத்தில் வெள்ள பாதிப்பு கடுமையாக இருந்தது. மகராஷ்டிராவில் கடந்த மூன்று நாள்களில் 48 பேர் உயிரிழந்ததோடு, பல லட்சம் ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நாசமடைந்துள்ளன.

இந்நிலையில், கர்நாடாகா, மகாராஷ்டிரா ஆகிய இரு மாநிலங்களும் வெள்ள பாதிப்பிலிருந்து மீளத் தேவையான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும் என பிரதமர் நரேந்திர மோடி அம்மாநில முதலமைச்சர்களுக்கு உறுதியளித்துள்ளார்.

  • Spoke to Maharashtra CM Uddhav Thackeray Ji regarding the situation arising due to flooding and heavy rain in parts of the state. My thoughts and prayers are with those sisters and brothers affected. Reiterated Centre’s support in the ongoing rescue and relief work. @OfficeofUT

    — Narendra Modi (@narendramodi) October 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முன்னதாக, வெள்ள பாதிப்பு குறித்து மகாராஷ்டிரா அரசு வெளியிட்ட அறிக்கையில், "வெள்ளத்தால் சுமார் மூன்றாயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன. 40 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லபட்டுள்ளனர். புனே, சோலபூர், சங்கிலி உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 87 ஆயிரம் ஹேக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட கரும்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் நாசமாகியுள்ளன" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Prime Minister Shri @narendramodi Ji enquired about the prevailing flood situation due to heavy rains in some districts of Karnataka. @PMOIndia assured all necessary support towards ongoing rescue and relief work.

    — B.S. Yediyurappa (@BSYBJP) October 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தொடர்ந்து, மேற்கு மகாராஷ்டிராவில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் விவசாயிகளுக்கும் மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என மாகராஷ்டிர அரசு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

தவிர, கர்நாடக முதலமைச்சர் வெள்ள மீட்புப்பணிகளுக்காக 85.5 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 800 மி.மீ இருந்த மழைப்பொழிவின் அளவு இந்தாண்டு 1000 மில்லி மீட்டராக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க: வரலாறு காணாத மழை - சூறையாடப்பட்ட ஹைதராபாத்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.