17ஆவது மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேங்களில் காலை 5மணி முதல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும், அருணாச்சலப்பிரதேசம், ஆந்திரா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரேகட்டமாக நடைபெறுகிறது. ஒடிசாவில் மட்டும் 147 தொகுதிகளில் 28 தொகுதிகளுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் இன்று நடைபெற்றுவருகிறது.
வாக்காளர்கள் அனைவரும் வாக்குச் சாவடி மையங்களில் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
![election](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/2968260_rahultweet.jpg)
இந்நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் நரேந்திரமோடி 2014ஆம் ஆண்டு தேர்தலின்போது, இரண்டு கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு, ஒவ்வொருவரின் வங்கிக்கணக்குகளில் ரூ.15 லட்சம் போடுதல் போன்ற வாக்குறுதிகளை அளித்திருந்தார்.
ஆனால், 2 கோடி வேலைவாய்ப்புகள் இல்லை. வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் பணம் இல்லை. நல்ல நாள் வரவும் இல்லை.
வேலை இல்லை,
பணமதிப்பிழப்பு,
விவசாயிகளின் வேதனை,
சரக்கு மற்றும் சேவை வரி,
பெரும் முதலாளிகளின் அரசு,
ரஃபேல்,
எல்வாற்றிலும் பொய்...பொய்...பொய்...
நம்பகத்தன்மையில்லை, வன்முறை, வெறுப்பு, பயம் இவையே மோடி ஆட்சியில் நடந்தது.
நீங்கள் இன்று வாக்களிக்கும் ஓட்டு இந்தியாவின் ஆன்மா. நாளை உங்களுடைய எதிர்காலம். எனவே சிந்தித்து வாக்களியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.