ETV Bharat / bharat

காங்கிரஸ் கனவான நியாய் திட்டம் சத்தீஸ்கரில் தொடக்கம் - காங்கிரஸ் ராஜீவ் காந்தி கிசான் நியாய் யோஜ்னா

டெல்லி: காங்கிரஸ் கனவுத் திட்டமான நியாய் திட்டத்தை காங்கிரஸ் ஆளும் மாநிலமான சத்தீஸ்கரில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தொடங்கிவைக்கின்றனர்.

Rahul
Rahul
author img

By

Published : May 21, 2020, 11:14 AM IST

முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தியின் பிறந்தநாளான இன்று காங்கிரஸ் கட்சியின் கனவுத்திட்டமான 'நியாய்' சத்தீஸ்கர் மாநிலத்தில் அமலுக்குவருகிறது. காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறும் இதன் தொடக்கவிழாவில் அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பேகல் பங்கேற்கிறார். இந்தத் திட்டத்தை காணொலி காட்சி மூலம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் எம்.பி. ராகுல் காந்தி தொடங்கிவைக்கின்றனர்.

ராஜீவ் காந்தி கிசான் நியாய் யோஜ்னா என்ற பெயரில் தொடங்கப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 19 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். இந்த திட்டத்தின் மூலம் சத்தீஸ்கரில் உள்ள நெற்பயிர் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதேபோல் கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.13,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சத்தீஸ்கர் மாநிலத்தில் இதுவரை ஒரு குறிப்பிட்ட பயிர் சாகுபடி மட்டுமே மேற்கொள்ளப்படும் நிலையில், மற்ற பயிர்கள் உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் விதமாகவும் இந்தத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் நினைவுநாளில் இந்தத் திட்டம் சத்தீஸ்கரில் மட்டும் தொடங்கப்படும் நிலையில், காங்கிரஸ் ஆளும் மற்றொரு மாநிலமான ராஜஸ்தானிலும் இதுவிரைவில் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: வீடு திரும்பிய 22 லட்சம் குடிபெயர்ந்த தொழிலாளர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.