மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று டெல்லியில் தொடங்கியது. இன்று தொடங்கிய கூட்டத் தொடரானது ஜூலை 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. வயநாடு தொகுதியில் வெற்றிபெற்ற ராகுல் காந்தி காலை வரை 17ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடருக்கு செல்லாதது பல கேள்விகளை எழுப்பியது.
இந்த சூழலில் மக்களவைக்கு வந்த ராகுல் காந்தி, மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். அவரைத்தொடர்ந்து மேல்கான் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட போபால் மக்களவை தொகுதியின் உறுப்பினர் பிரக்யா சிங் தாகூர் மக்களவை உறுப்பினராக பதவியேற்றார்.
ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட்டு பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.