மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனால், தேர்தல் பரப்புரை சூடு பிடித்துள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்னும் ஒரு தேர்தல் பரப்புரையில் கூட கலந்துகொள்ளவில்லை.
இதற்கு நேரெதிர் மாறாக ராகுல் காந்தி, மகாராஷ்டிராவில் ஐந்து பொதுக் கூட்டங்களிலும் ஹரியானாவில் ஒரு பொதுக் கூட்டத்திலும் கலந்துகொண்டார். இதேபோல், கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் ஒரு பரப்புரையில் கூட கலந்துகொள்ளாமல் இருப்பது அரசியல் வட்டாரத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் தோல்வியடையும் என கருத்துக் கணிப்பு தெரிவிக்கும் நிலையில், தேர்தல் பரப்புரையில் இவர்கள் கலந்துகொள்ளாமல் இருப்பது இதனை உறுதிபடுத்தும் விதமாக உள்ளது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.