ETV Bharat / bharat

மக்களிடம் ஆலோசனை கேட்கும் ராகுல் காந்தி!

டெல்லி: கரோனா வைரஸ் பாதிப்பால் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பை சரி செய்ய பொதுமக்கள் ஆலோசனை வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

rahul-seeks-suggestions-from-public-for-economic-stimulus-package-for-msmes

author img

By

Published : Apr 22, 2020, 1:37 PM IST

Updated : Apr 22, 2020, 2:45 PM IST

கரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டு 29 நாள்களாகியுள்ள நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தொடவுள்ளது. இதனால் ஊரடங்கு உத்தரவு மீண்டும் நீட்டிக்கப்படும் என மக்களிடையே பேச்சு அடிபடத் தொடங்கியுள்ளது.

ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் உணவுக்காகவும், அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் தவித்து வரும் நிலையில், சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்தியாவின் முதுகெலும்பாகப் பார்க்கப்படும் சிறு, குறு தொழில்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப வெகு நாள்கள் ஆகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மக்களிடன் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில், ''கரோனா வைரஸால் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. அத்தொழில்களில் ஈடுபட்டுள்ளோருக்கு, சலுகைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

சிறு, குறு, நடுத்தரத் தொழில்களைக் காப்பதற்காக பொதுமக்கள் தங்களுடைய ஆலோசனைகளை voiceofmsme.in என்ற தளத்தில் வழங்கவேண்டும் அல்லது "HelpSaveSmallBusinesses'' என்ற ஹேஷ்டாக் மூலம் சமூக வலைதளத்தில் பகிர வேண்டும்.

மக்களின் ஆலோசனைகள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு அரசுக்கு கொடுக்கப்படவுள்ளது. நாட்டின் அதிகமான தொழிலாளர்களைக் கொண்டுள்ள தொழில்களைக் காக்க நிச்சயம் அனைவரும் உதவ வேண்டும்” என ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: மே மாத இலவச ரேஷன் பொருள்களுக்கு ஏப்.24, 25இல் வீடுகளுக்குச் சென்று டோக்கன் - அரசு அறிவிப்பு

Last Updated : Apr 22, 2020, 2:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.