ETV Bharat / bharat

'யாராலும் தடுக்க முடியாது' - சூளுரையுடன் மீண்டும் ஹத்ராஸ் செல்லும் ராகுல் - ஹத்ராஸ் பாலியல் வன்புணர்வு

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராசில் உயிரிழந்த பெண் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேசம் செல்லவுள்ளார் எனக் கூறப்படுகிறது.

Rahul, Priyanka
Rahul, Priyanka
author img

By

Published : Oct 3, 2020, 11:50 AM IST

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்புணர்வால் உயிரிழந்த பட்டியலின இளம்பெண் குடும்பத்தை சந்திக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று மீண்டும் ஹத்ராஸ் செல்லவுள்ளார் எனக் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த அக்டோபர் 1ஆம் தேதி ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் ஹத்ராஸ் சென்றபோது உத்தரப் பிரதேச மாநில எல்லையிலேயே அவர்களது வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, ஹத்ராஸ் நோக்கி நடைபயணம் மேற்கொண்ட இருவரையும் அம்மாநில காவல் துறையினர் கைது செய்து டெல்லிக்கு திருப்பி அனுப்பினர். இந்த நிகழ்வின்போது ராகுல் காந்தி காவல்துறையினரால் கீழே தள்ளப்பட்ட சம்பவம் கூடுதல் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நான் ஹத்ராஸ் பெண் குடும்பத்தினரை சந்திப்பதை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கோவிட்-19: இந்தியாவில் ஒரு லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.