மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு அக்டோபர் 21ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24ஆம் தேதி தொடங்கவுள்ளது. தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ள நிலையில், அக்டோபர் 14ஆம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை ராகுல் காந்தி தொடங்குவார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மும்பையில் அக்டோபர் 13ஆம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொள்ளவுள்ளார். அரசியல் களத்திலிருந்து சிறிது நாட்கள் விலகியிருந்த ராகுல் காந்தி தற்போது மீண்டும் தேர்தல் களத்தில் குதித்துள்ளார். இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில், "காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்குதல், முத்தலாக், சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் ஆகிய விவகாரங்களில் காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன? தேர்தல் நடக்கவுள்ள நிலையில் ராகுல் காந்தி விடுமுறையில் உள்ளார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரம் குறித்து ராகுல் காந்தி ஹரியானா வந்து விளக்க வேண்டும்" என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு