"அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கும் விதிகளில் மாற்றம், வாக்குப்பதிவு இயந்திரங்களில் நடந்த குளறுபடிகள், நமோ டிவிக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சி உரிமம், கேதார்நாத்தில் நடந்த குகை தியான நாடகம் போன்றவை தேர்தல் ஆணையம் பாஜகவிடமும், அதன் கும்பலிடமும் சரணடைந்துள்ளதை காட்டுகிறது. இதனை மக்களும் அறிவார்கள்" என்று தன் ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையம் மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டு சுமத்தும் நிலையில், ராகுல் காந்தி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.