ETV Bharat / bharat

ராகுல் காந்தி பதிலால் மகாராஷ்டிரா கூட்டணியில் குழப்பம்! - ராகுல் காந்தி பதிலால் மகாராஷ்டிரா கூட்டணியில் குழப்பம்

டெல்லி: மகாராஷ்டிரா கூட்டணி அரசில் சலசலப்பு ஏற்படும் விதமாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

Rahul
Rahul
author img

By

Published : May 26, 2020, 8:35 PM IST

டெல்லியில் ராகுல் காந்தி இன்று செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டார். அப்போது, பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது நாட்டிலேயே கரோனா பாதிப்பு அதிகம் கொண்ட மாநிலமான மகாராஷ்டிரா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த ராகுல், 'மகாராஷ்டிராவில் நாங்கள் அரசை ஆதரிக்கும் கட்சி மட்டுமே. தவிர முக்கிய முடிவுகள் எடுக்கும் கட்சியாக இல்லை. பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், புதுச்சேரி ஆகிய காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் தான் முடிவெடுக்கும் நிலையில் நாங்கள் உள்ளோம்' எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் முன்னாள் தலைவரான ராகுலின் இந்த கருத்து மகாவிகாஸ் அகாதி கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே மற்றொரு கூட்டணிக் கட்சித் தலைவரான சரத் பவார் அம்மாநில ஆளுநர் பி.எஸ். கோஷயாரியைச் சந்தித்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், ராகுலின் இந்தக் கருத்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மகாராஷ்டிரா அரசியலில் குழப்பம்; தாக்கரே - பவார் சந்திப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.