ETV Bharat / bharat

உத்தரப் பிரதேசத்தில் குண்டர்களின் ஆட்சி: பத்திரிகையாளர் கொலையை கண்டித்த ராகுல் காந்தி

லக்னோ: காசியாபாத்தை சேர்ந்த பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த ராகுல் காந்தி, உத்தரப் பிரதேசத்தில் குண்டர்களின் ஆட்சி நடைபெற்றுவருவதாக விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
author img

By

Published : Jul 22, 2020, 4:30 PM IST

உத்தரப் பிரதேசம் காசியபாத்தை சேர்ந்தவர் பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி. தனது உறவினரான பெண் ஒருவருக்கு சிலர் தொல்லை கொடுத்துவருவதாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, வீட்டிற்கு அருகே அடையாளம் தெரியாத நபர்களால் அவர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு சுடப்பட்டுள்ளார். இதனிடையே, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விக்ரம் அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் உறவினர் பெண்ணுக்கு தொல்லை கொடுத்த அதே நபர்கள் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக பத்திரிகையாளரின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இது பெரும் அதிர்வலைகலை ஏற்படுத்திவரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் குண்டர்களின் ஆட்சி நடைபெற்றுவருவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

  • अपनी भांजी के साथ छेड़छाड़ का विरोध करने पर पत्रकार विक्रम जोशी की हत्या कर दी गयी। शोकग्रस्त परिवार को मेरी सांत्वना।

    वादा था राम राज का, दे दिया गुंडाराज।

    — Rahul Gandhi (@RahulGandhi) July 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தனது உறவினர் பெண்ணுக்கு தொல்லை கொடுத்த நபர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால்தான் பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி கொல்லப்பட்டுள்ளார். அவரின் குடும்பத்தாருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ராம ராஜ்ஜியத்தை அளிப்பதாக வாக்குறுதி அளித்த அவர்கள், குண்டர்களின் ஆட்சியை அளித்துவருகிறார்கள்" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அசாம் எண்ணெய் கிணற்றில் விபத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.