இந்தியாவில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ச்சியாக வலியுறுத்திவருகிறார். கொரோனா பாதிப்பு இந்தியாவின் பொருளாதாரத்தையும் வெகுவாகப் பாதிக்கும் என ராகுல் காந்தி எச்சரித்துவருகிறார்.
ராகுல் காந்தியின் இந்த எச்சரிக்கையை விமர்சிக்கும்விதமாக மத்தியப் பிரதேச மாநில விஷ்வ இந்து பரிஷத் தலைவர் சாத்வி பிராச்சி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். கரோனா குறித்து ராகுல் காந்தி பேசக் கூடாது, அவர்தான் இத்தாலியிலிருந்து இந்தியாவிற்கு கரோனாவைக் கொண்டுவந்துள்ளார் எனக் கூறியுள்ளார்.
கரோனா போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து ராகுல் காந்தி பேசத் தேவையில்லை எனவும் சிறுபிள்ளைத்தனமான அவர் விளையாட்டு பொம்மைகள் குறித்து மட்டுமே பேச வேண்டும் என கிண்டலடிக்கும்விதமாகவும் கருத்து கூறியுள்ளார்.
உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி கொரோனா வைரசால் கடுமையாகப் பாதிக்கப்படுள்ளது. இதுவரை, இத்தாலியில் 27 ஆயிரத்து 980 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராகுலின் தாயார் இத்தாலியில் பிறந்தவர் என்பதை வைத்து சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் மீது பாஜக, இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இது போன்ற சர்ச்சைக் கருத்தை தொடர்ச்சியாகத் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: கொரோனா: இந்தியாவுக்குள் நுழைய தடை!