பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. இதையடுத்து தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் அனைத்துக் கட்சிகளும் தற்போது ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் களத்தில் குதித்துள்ளார்.
இதன் முன்னோட்டமாக பிகார் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளிடம் காணொலி மூலம் தொடர்பு கொண்டு பேசிய ராகுல், தேர்தல் பரப்புரையில் தான் முழுவீச்சில் ஈடுபடவுள்ளதாக உறுதியளித்தார்.
மேலும் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் பின்னர் முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்த ராகுல் தற்போது கள அரசியலில் தீவிரப் பணிகள் செய்து ஆட்சியைப் பிடிக்க கடும் உழைப்பை தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பிகாரில் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி தற்போது நடைபெற்றுவருகிறது. முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் பாஜக, ராம் விலாஸ் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
தற்போதைய சூழலில் தொகுதி பங்கீடு தொடர்பாக லோக் ஜனசக்தி கட்சி அதிருப்தியில் இருப்பதால், கூட்டணியில் மாற்றம் ஏற்படும் என்ற கருத்து நிலவிவருகிறது. முக்கிய எதிர்க்கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளக் கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது.
இதையும் படிங்க: கான்பூர் என்கவுன்டர்; கேங்க்ஸ்டார் விகாஸ் துபே உள்ளிட்ட 35 பேர் மீது வழக்குப் பதிவு