டெல்லியில் உள்ள சாஸ்திரி பவனில் இன்று மதியம் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க வெகுநேரம் போராடி தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்துள்ளனர்.
சாஸ்திரி பவன் கட்டடத்தில் ஏற்பட்ட மின் கோலாறு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. மேலும் தற்போதுவரை உயிர் சேதம் ஏதும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறையினர் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரஃபேல் சர்ச்சை இன்னும் கூட இந்தியா முழுவதும் விவாத பொருளாக இருந்து வரும் நிலையில், தற்போது சாஸ்திர பவனில் ஏற்பட்ட தீ விபத்தால் பல்வேறு அரசு ஆணவனங்கள் எரிந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "தொடர்ச்சியாக ஆதாரங்கள் உள்ள முக்கிய ஆணவனங்களை அழித்து வருவது நியாயமற்ற செயல், இதை செய்யும் மோடிக்கு கூடி விரைவில் முடிவு நெருங்கிவிட்டது என்று பதிவிட்டுள்ளார்.