காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேசிய மக்கள் தொகை பதிவேட்டை ஏழைகள் மீதான வரி என விமர்சித்தார். இதற்கு ஆளும் பாஜக தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “ராகுல் காந்தியை இந்த ஆண்டின் (2019) மிகப்பெரிய பொய்யர் என விமர்சித்தார்.
இன்று (டிச27) ராகுல் காந்தி தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து கருத்து ஒன்றை கூறினார்.
அதில், தேசிய மக்கள் தொகை பதிவேடு ஏழைகள் மீதான மற்றொரு பணமதிப்பிழப்பு தாக்குதல். இந்த சட்டம் அமல்படுத்தப்படும்பட்சத்தில் ஏழைகள் குடியுரிமைக்காக அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கும்.
தங்களின் பெயர்கள் விடுபட்டிருந்தாலும் இதே நிலைதான் ஏற்படும். இதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் திரட்டப்படும். அந்தப் பணம் மீண்டும் அந்த 15 பேரின் பாக்கெட்டுக்கு செல்லும் என தெரிவித்திருந்தார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க : பழங்குடியாக மாறி நடனமாடிய ராகுல் காந்தி!