உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'எனது மதிப்பை குறைப்பதற்காகவே ராகுல் காந்தி ரஃபேல் விவகாரத்தில் என்னை ஆதாரமின்றி குற்றம்சாட்டிவருகிறார். ஆனால் உங்களது தந்தை ராஜீவ் காந்தி நேர்மையானவர் என்று கூறுவார்கள். அவர் ஊழலில் நம்பர் ஒன்னாக மாறினார்' என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில், 'போர் முடிந்து விட்டது. உங்களது கர்மா உங்களுக்காக காத்திருக்கிறது. என் தந்தையைப் பற்றிய உங்களது உள்நம்பிக்கையை பரப்புவது எந்தவிதத்திலும் உங்களை பாதுகாக்காது. எனது ஆழமான அன்பும் அனாயசமான ஆரத் தழுவலும்' என பதிலடி கொடுத்துள்ளார்.