ETV Bharat / bharat

புத்தரின் பிச்சைப்பாத்திரம் தொடர்பில் நிதிஷிக்கு கடிதம் எழுதிய ஆர்.ஜே.டி முன்னாள் தலைவர் ! - ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் துணைத் தலைவர் ரகுவன்ஷ் பிரசாத் சிங்

பாட்னா : ஆப்கானிஸ்தானில் இருக்கும் புத்தரின் 'பிக்ஷாபத்ராவை' திரும்பக் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்.ஜே.டி முன்னாள் தலைவர் ரகுவன்ஷ் பிரசாத் சிங், பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நிதீஷிக்கு கடிதம் எழுதியுள்ள ஆர்.ஜே.டி முன்னாள் தலைவர் !

author img

By

Published : Sep 11, 2020, 5:02 PM IST

லாலு பிரசாத் யாதவின் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியில் இருந்து அண்மையில் விலகிய ரகுவன்ஷ் பிரசாத் சிங், பிகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமாருக்கு மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கடிதம் எழுதியுள்ளார்.

அதில், "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் (எம்.என்.ஆர்.இ.ஜி.ஏ) சட்டத்தின் கீழ் அரசு மற்றும் பஞ்சமி நிலங்களின் நிர்வாகத்தை மேலும் மேம்படுத்த, அதன் மீதான ஆக்கிரமிப்புகளை அகற்றி மேலாண்மையை அதிகரிக்க வேண்டும். அதே வேளையில், நிர்வாகத்தில் பொதுவான விவசாயிகளின் நிலங்களையும் சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த விஷயத்தில் ஒரு நிலைப்பாட்டை அடைய சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும்.

"ஜனநாயகத்தின் தாய்" மற்றும் "முதல் குடியரசு" என்று வர்ணிக்கப்படும் வைஷாலியில், ஆகஸ்ட் 15 மற்றும் ஜனவரி 26 ஆகிய தேதிகளில் வைசாலியிலிருந்து தேசியக் கொடியை ஏற்ற அனுமதி வழங்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் இருந்து புத்தரின் 'பிக்ஷாபத்ராவை' திரும்பக் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என கோரினார்.

லோக் ஜான்ஷக்தி கட்சியில் (எல்ஜேபி) வைஷாலியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., ராமா சிங், ஆர்.ஜே.டி.யில் இணைந்ததை அடுத்த அதிருப்தியில் இருந்துவந்த அவர் ஜூன் மாதத்தில், ஆர்ஜேடியின் தேசிய துணைத் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததாக அறியமுடிகிறது.

ஆர்.ஜே.டி நிறுவனர் லாலு பிரசாத் யாதவின் குடும்பத்துடன் நெருக்கிய நட்புறவில் இருந்துவந்த ரகுவன்ஷ் பிரசாத் சிங், தற்போது டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) உடல் நல குறைபாடு காரணமாக மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.