ரஃபேல் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற அளித்த தீர்ப்பை அனைத்து ஆவணங்களின் அடிப்படையில் மறு விசாரணை செய்யக்கோரி யஷ்வந்த் சின்ஹா, பிரசாந்த் பூஷண், அருண் ஷோரி ஆகியோர் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுகுறித்த விசாரணையை உச்ச நீதிமன்ற ஏற்றுக்கொள்ளக் கூடாது, ஏனென்றால்
- மனுதாரர்கள் சமர்ப்பித்த 'தி இந்து' நாளிதழ் வெளியிட்ட ஆவணங்கள் அரசிடம் திருடப்பட்டது,
- இந்நடவடிக்கை தேசப்பாதுகாப்புக்கு எதிரானது
என வாதிட்டு மனுவை தள்ளுபடி செய்யக்கோரி அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் நீதிமன்றத்தில் வாதிட்டிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பான தீர்ப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோரின் அமர்வு வழங்கியுள்ளது. அதில்,
- சீராய்வு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும்,
- அரசின் ஆட்சேபம் ஏற்றுக்கொள்ளப்படாது,
என மூன்று நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு ஆளும் பாஜக அரசுக்கு பின்னடைவாகக் கருதப்படும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.