இந்தியாவில் கோவிட்-19 நோய் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 44 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நோய் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கோவிட்-19 தொடர்பாக சரியான தகவல்களையும், சுகாதார சேவைகளையும் மக்களிடையே கொண்டு சேர்க்க ஆரோக்கிய சேது என்ற செயலி ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்தச் செயலியை ஆப் ஸ்டோர் (ஆப்பிள் போன்களுக்கு) அல்லது கூகுள் பிளே ஸ்டோர் (அண்டிராய்டு போன்களுக்கு) Mpfa தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதே பெயரில் போலியான செயலி ஒன்றை மோசடிக்காரர்கள் உருவாக்கியுள்ளதாகவும், அதனால் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் தெலங்கானா மாநிலம் ராச்சகொண்டா மாவட்ட காவல்துறை துணை ஆணையர் எஸ்.ஹரிநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எப்படிக் கண்டறிவது :
மத்திய அரசு வெளியிட்ட செயலின் ஆங்கில எழுத்துகள் 'Aarogya Sethu App', மோசடிக்காரர்கள் உருவாக்கிய போலி செயலின் ஆங்கில எழுத்துகள் 'Arogya Setu App'
இதையும் படிங்க : சென்னையில் டாஸ்மாக் திறக்கப்படாது - தமிழ்நாடு அரசு!