நாட்டின் 71ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு காஷ்மீரில் மொபைல் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. முன்னதாக சிறப்புத் தகுதி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு மொபைல் சேவைகள் முடக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, ஜனவரி 25ஆம் தேதி மீண்டும் இணைய சேவைகள் தொடங்கப்பட்ட நிலையில், மீண்டும் பாதுகாப்பை காரணம்காட்டி மொபைல் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அரசு அலுவலர் ஒரு கூறுகையில், "சுதந்திர, குடியரசு தினங்களின்போது மொபைல் சேவைகள் முடக்கப்படுவது வழக்கமான ஒன்று. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஒரு அங்கமாக 2005ஆம் ஆண்டு முதல் இப்படி செய்யப்பட்டுவருகிறது" என்றார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு மாநிலத்தின் பல பகுதிகளில் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டிருந்தன. பிரிவினைவாத அமைப்புகள் இம்மாதிரியான தினங்களில் பந்த் அறிவிப்பது வழக்கம். ஆனால், பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்கள் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்ட காரணத்தால் பந்த் அறிவிக்கப்படவில்லை.
இதையும் படிங்க: இந்தியா, பிரேசில் விவகாரங்களை அணுகுவதில் ஒற்றுமை...! - பிரதமர் நரேந்திர மோடி