ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிங்கரல்லாபாடு மலைப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் ஆடுகளை மேய்ச்சலுக்காக அங்குள்ள மலைப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது யாரும் எதிர்பாராத வண்ணம் திடீரென்று வந்த மலைப்பாம்பு, அங்கிருந்த ஆடு குட்டியை உயிருடன் விழுங்கியது.
அதன் பின்னரும் பசி அடங்காததால் அருகிலிருந்த மற்றொரு ஆட்டையும் விழுங்க முயன்றது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மேய்ப்பர்கள், அந்த மலைப்பாம்பைக் கொன்றனர். பின் அந்த பாம்பின் வயிற்றைக் கிழித்து வயிற்றுக்குள் இருந்த ஆடுகளை உயிருடன் மீட்டனர்.