டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி 62ஆவது 'மனதின் குரல்' (மன் கி பாத்) என்ற வானொலி நிகழ்ச்சியில் இன்று கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், தங்கள் புதிய இந்தியாவின் சகோதரிகள், தாய்மார்கள் நாட்டின் மாற்றத்திற்கான பங்கினை அளிப்பதாகப் பெருமையுடன் குறிப்பிட்டார்.
உதாரணமாக பிகார் மாநிலம் புர்ணியா கிராமத்தில் பட்டு நெசவுத்தொழிலில் ஈடுபட்டுவரும் பெண்கள், இந்திய நாட்டு மக்களுக்கு உந்துசக்தியாகவும், சிறந்த எடுத்துக்காட்டாகவும் உள்ளதாகப் புகழாரம் சூட்டினார்.
மேலும் பேசிய அவர், "அவர்கள் (நெசவுத் தொழிலில் ஈடுபடும் பெண்கள்) மல்பெரி பட்டுப்புழுக்களிலிருந்து நூல் தயாரித்து குறைந்த அளவே வியாபாரிகளுக்கு விற்பனைசெய்தனர்.
ஆனால் வியாபாரிகள் அதனை வாங்கி பட்டு நூலாக மாற்றி பெரும் லாபம் ஈட்டியுள்ளனர். அதனால் தற்போது அவர்கள் அரசின் உதவியுடன் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒளவையாரின் பொன்மொழியை குறிப்பிட்டு பேசிய மோடி!