பாகிஸ்தான், ஜெர்மனி ஆகிய நாடுகளின் ஆதரவு கொண்டு செயல்பட்டுவரும் காலிஸ்தான் ஜிந்தாபாத் ஃபோர்ஸ் (khalistan Zindabad Force) என்னும் பயங்கிரவாத அமைப்பு பஞ்சாப் மாநிலத்திற்கு அச்சுறுத்தலாக இருந்துவருகிறது. இந்த அமைப்பினர் பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் எல்லை வழியாக ட்ரோன் மூலம் ஆயுதங்களை கடத்துவதாக சண்டிகர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், காவல் துறையினர் அப்பகுதியில் நடத்திய தீவிர சோதனையில், ஏகே-47, கை துப்பாக்கி, கை வெடிகுண்டு, சாட்டிலைட் ஃபோன்கள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ரொக்கமாக ஒரு லட்ச ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் அதனை சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த நான்கு பேரையும் கைது செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில், இந்த ஆயுதங்கள் பாகிஸ்தானில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிடம் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
இந்த சட்டவிரோத ஆயுதம் பரிமாற்றத்தில் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு ஈடுபட்டுள்ளதால், மேலும் இந்த வழக்கை தீவிரமாக விசாரணை செய்ய தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் செய்து அம்மாநில முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படியுங்க: '370 சட்டப்பிரிவு காஷ்மீர் ஆட்சியாளர்களின் ஊழலை பாதுகாத்துள்ளது' -அமித் ஷா