பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் நகரத்திலுள்ள பட்டியாலா பகுதியிலுள்ள பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் மாட்டிக்கொண்டவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்தத் விபத்தில் தீ அருகில் இருக்கும் சில கட்டடங்களுக்கும் பரவி சேதத்தை அதிகமாக்கியுள்ளது.
இதனால் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 18லிருந்து 32ஆக உயர்ந்துள்ளது. தேடுதல் பணி முடிவடைந்த பிறகே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, சேதமடைந்த பொருட்களின் விவரங்களை அளிக்க முடியும் என தேசிய பேரிடர் மீட்புக் குழு தெரிவித்துள்ளது.