கரோனா லாக்டவுன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பணிபுரிந்த குடிபெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் செல்லும் சூழல் நிலவிவருகிறது. இதன்காரணமாக பல்வேறு மாநிலங்கள் தங்களின் தொழில் நடவடிக்கைக்கு தொழிலாளர்கள் இல்லாமல் பரிதவிக்கும் சூழல் நிலவிவருகிறது.
இந்திய வேளாண் துறைக்கு முக்கிய பங்காற்றும் பஞ்சாப் மாநிலத்தில் நடவு மற்றும் அறுவடைப் பணிகள் மேற்கொள்ள லட்சக்கணக்கான குடிபெயர் தொழிலாளர்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்து பணியாற்றுகின்றனர். இந்நிலையில், தற்போது பஞ்சாபில் நடவுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில் தொழிலாளர்கள் நிலவரம் குறித்து அம்மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், பஞ்சாபில் சுமார் 13 லட்சம் தொழிலாளர்கள் பொதுவா பணிபுரியும் நிலையில், தற்போது 3 லட்சம் தொழிலாளர்கள் மட்டுமே சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். தற்போது 10 லட்சம் பேர் உள்ள நிலையில் நடவுப் பணிகள் எந்தவித சுணக்கமும் இன்றி நடைபெறும். தற்போதைய சூழலில், 125 லட்சம் டன் கோதுமை நடப்பு சாகுபடி காலத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வேளாண் சட்ட திருத்தங்களால் ஏற்படும் விளைவுகள் என்ன - விவசாய பொருளாதார நிபுணர் முனைவர் கோபிநாத் பேட்டி