பிரதமர் நரேந்திர மோடியை பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் டெல்லியில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, பிராந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மாநிலத்தில் உள்ள சிந்து நதிநீர் திட்டத்தின் மூன்று ஆறுகளின் கால்வாய் வழிப்படுத்தலை, தேசிய திட்டமாக அறிவிக்க மத்திய அரசை அமரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. கர்தார்பூர் சாஹிப் திறப்பு விழாவில் பங்கேற்கும்படி அவருக்கு பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
பின்னர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை அமரீந்தர் சிங் சந்தித்து கர்தார்பூர் குருத்வாரா திறப்பு விழாவில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்துள்ளார். முன்னதாக, இந்த விழாவில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான், மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுத்திருந்தது. சிக்கீய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவின் 550ஆவது பிறந்த நாளை முன்னிட்டு குருத்வாரா திறக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:
கர்தார்பூர் வழித்தட சேவை கட்டணம் - நரேந்திர மோடிக்கு பஞ்சாப் முதலமைச்சர் கடிதம்