ETV Bharat / bharat

'இந்திய வான்வெளியில் நுழைந்த பாக்., விமானம்!' - உளவு பார்க்கிறதா பாகிஸ்தான்?

author img

By

Published : Oct 9, 2019, 8:43 PM IST

சட்டீஸ்கர்: பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானம் ஒன்று பஞ்சாப் எல்லைக்குள் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளில்லா விமானம்

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தில் நேற்றிரவு இந்திய வான்வெளியில் இந்த ஆளில்லா விமானம் தென்பட்டுள்ளது. இந்த உளவு விமானம் என்பது அதிக எடையைக் கொண்ட பிரிவைச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படை அலுவலர் அளித்த தகவலில், 'பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தில் உசைனி வாலா பகுதியில், ஆளில்லா விமானத்தை வீரர்கள் பார்த்துள்ளனர். இந்த விமானம் பாகிஸ்தான் பகுதியிலிருந்து வந்ததாகும். இதையடுத்து எல்லை பாதுகாப்புப் படையும், பஞ்சாப் காவல்துறையும் எச்சரிக்கையுடன் செயல்பட்டுவருகிறது' எனக் கூறியுள்ளார்.

செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் இருந்து வந்த ஆளில்லா உளவு விமானம் ஒன்று, பஞ்சாப் பகுதியில், ஏ.கே.47 ரகத் துப்பாக்கிகள், 8 சாட்டிலைட் போன்கள், கையெறி குண்டுகள் உள்ளிட்டவற்றை கீழே விழச் செய்து விட்டுச் சென்றதாகப் பஞ்சாப் காவல்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய வான்வெளியில் பறந்த பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானம்

இதையும் படிங்க:

'பிரதமர் மோடி-சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பில் எந்தவொரு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படாது'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.