மகாராஷ்டிர மாநிலத்தில் யானைகளின் நான்கு பெரிய தந்தங்களை கடத்திய குற்றத்திற்காக கடந்த மாதம் 24ஆம் தேதி ஒருவரை புனே சிறப்பு குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவந்தனர்.
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கடத்தி பதுக்கிவைக்கப்பட்டிருந்த மேலும் ஆறு தந்தங்களை காவல் துறையினர் நேற்று கைப்பற்றியுள்ளனர். பின்னர், தந்தங்களைக் கடத்தியவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இது குறித்து காவல் துறை தரப்பில், தந்தங்களை கடத்திய நபர் அதனை விற்கும் நோக்கில் மிக அழகாக கண்ணைக் கவரும் வகையில் செதுக்கிவைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சமூக வலைத்தளத்தில் நடிகர் சல்மான் கானை மிரட்டியவர்கள் கைது!