புதுச்சேரியில் ஜூலை 18ஆம் தேதி கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்ய வந்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மருத்துவ அலுவலர்களின் மனம் புண்படும் வகையில் திட்டியதாகவும், அச்சுறுத்தும் வார்த்தைகளால் மிரட்டியதாகவும் சுகாதார ஊழியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் நடவடிக்கையைக் கண்டிக்கும் விதமாக நேற்று (ஜூலை 20) மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.
இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக ஆளுநர் தனது மிரட்டும் வார்த்தைகளைத் திரும்பப் பெற வலியுறுத்தி புதுச்சேரி அரசு இந்திரா காந்தி மருத்துவமனை, ராஜீவ் காந்தி மகப்பேறு மருத்துவமனை, அனைத்து சுகாதார மையங்கள் ஆகியவற்றில் காலை 8 மணி முதல் இரண்டு மணி நேர பணிப் புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: மின் கட்டணம் உயர்வு - கருப்புக் கொடி ஏந்தி திமுக ஆர்ப்பாட்டம்