ETV Bharat / bharat

வியாபாரிகளுக்கு தேர்தல் துறை வழங்கிய ஆலோசனை - வியாபாரிகளுக்கு

புதுச்சேரி: வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தேர்தல் நேரங்களில் சரியான ஆவணங்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என தேர்தல் துறை அறிவித்துள்ளது.

புது
author img

By

Published : Mar 15, 2019, 7:57 PM IST

புதுச்சேரி வியாபாரிகள் தேர்தல் காலத்தில் இடர்பாடு இன்றி ரொக்கப்பணம் எடுத்துச் செல்வதற்கான நடத்தை விதிமுறைகள் பற்றிய விளக்கக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அருண் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் புதுச்சேரி வருமான வரித்துறை அதிகாரி கணேசன் மற்றும் புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சங்கத் தலைவர் சிவசங்கரன் மற்றும் புதுச்சேரி வணிகர்கள் பலர் கலந்து கொண்டனர் .

வியாபாரிகள், வியாபார நோக்கத்திற்காக பணம் எடுத்துச் செல்லும் போது ஏற்படும் இன்னல்கள் குறித்தும், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வங்கியின் மூலம் தங்களுடைய பண பரிவர்த்தனைகளை தொடர்வது குறித்தும் விவாதம் எழுந்தது.

இதற்கு பதில் அளித்து பேசிய மாவட்ட ஆட்சியா், வியாபாரிகளையும், பொதுமக்களையும் தங்கள் தொழில் சாராத எந்த விதமான செயலையும் செய்யாமல் தேர்தலை சுமுகமான முறையில் நடத்திட ஒத்துழைக்குமாறு கேட்டு கொண்டாா்.

வியாபாரிகள் மற்றும் பொதுமக்களைப் பொறுத்தவரை ரூபாய் 50 ஆயிரம் ரூபாய் வரை ஆவணங்கள் இன்றி ரொக்கமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர் எனவும் வாகன சோதனையின் போது ரூபாய் பத்து லட்சத்திற்கு அதிகமான தொகை சிக்கினால் அது குறித்து வருமான துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்படும் எனவும் கூறினாா்.

Intro:வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த நேரங்களில் சரியான ஆவணங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும் என வியாபாரிகளுக்கு தேர்தல் துறை அறிவித்துள்ளது

Body: புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நன்னடத்தை விதிகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. மேலும் புதுச்சேரி மாநிலம் முழுவதும் வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று புதுச்சேரி வியாபாரிகள் தேர்தல் காலத்தில் இடர்பாடு இன்றி ரொக்கப்பணம் எடுத்துச் செல்வதற்கான நடத்தை விதிமுறைகள் பற்றிய விளக்கக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது .மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அருண் தலைமையில் நடைபெற்ற தேர்தல் குறித்த விளக்கக் கூட்டத்தில் புதுச்சேரி வருமான வரித்துறை அதிகாரி கணேசன் மற்றும் புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சங்கத் தலைவர் சிவசங்கரன் மற்றும் புதுச்சேரி வணிகர்கள் பலர் கலந்து கொண்டனர் .இந்தக் கூட்டத்தில் வியாபாரிகள் ,வியாபார நோக்கத்திற்காக பணம் எடுத்துச் செல்லும் போதும் ஏற்படும் இன்னல்கள் குறித்தும் விளக்கம் கேட்டனர். அதற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர் .வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வங்கியின் மூலம் தங்களுடைய பண பரிவர்த்தனைகளை தொடர்வது , இது தவிர தேர்தல்கால நடத்தை விதிகளுக்கு எதிராக சந்தேகத்திற்கு இடமாக பண பரிமாற்றம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் வியாபாரிகளும் பொதுமக்களும் தங்கள் தொழில் சாராத எந்தவிதமான செயலையும் செய்யாமல் தேர்தலை சுமுகமான முறையில் நடத்திட ஒத்துழைக்குமாறு இக்கூட்டத்தின்போது கேட்டுக்கொள்ளப்பட்டது வியாபாரிகள் மற்றும் பொதுமக்களைப் பொறுத்தவரை ரூபாய் 50,000 வரை ஆவணங்கள் இன்றி ரொக்கமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர் எனவும் வாகன சோதனையின்போது ரூபாய் பத்து லட்சத்திற்கு அதிகமான தொகை சிக்கினால் அது குறித்து வருமான துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் இந்த கூட்டத்தின்போது எடுத்துரைக்கப்பட்டது

மேலும் புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்கள் செய்திகள் ஆகியன தேர்தல் விதிக்கு உட்பட்டு வெளியிடப்படுகின்றன எனவும் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Conclusion:பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வியாபாரிகள் தேர்தல் காலத்தில் இடரின்றி ரொக்கப் பணம் எடுத்துச் செல்வதற்கான நடத்தை விதிமுறைகள் பற்றிய விளக்கக் கூட்டம் மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற முடிவடைந்தது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.