புதுச்சேரி கருவடிக்குப்பம் கெங்கையம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் விநாயகம் (62). இவர் வீட்டில் நாய் ஒன்றை வளர்த்துவந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த பிரதாப் என்ற இளைஞர் அந்த வழியாக வரும்போதெல்லாம் விநாயகம் வளர்த்துவரும் நாய் குரைத்துக்கொண்டே இருக்கும்.
இதில் இருவீட்டாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று அந்த வழியாக வந்த பிரதாப்பை பார்த்து நாய் குரைத்துள்ளது. இது தொடர்பாக நள்ளிரவில் விநாயகத்திற்கும், பிரதாப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த விநாயகம் கத்தியால் பிரதாப்பின் மார்பில் குத்தியுள்ளார்.
இதையடுத்து, பிரதாப்பை அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சிகிச்சைப் பலனின்றி பிரதாப் உயிரிழந்தார்.
இது குறித்து லாஸ்பேட்டை காவல் துறையினர் விநாயகத்தின் மீது வழக்குப்பதிந்து கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: இடுகாட்டில் கஞ்சா விற்ற இருவர் கைது