ETV Bharat / bharat

டீக்கடையில் அமர்ந்து முதலமைச்சர் பரப்புரை! - tea shop election campaign

புதுச்சேரி: காமராஜ் நகர் தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் நாராயணசாமி டீக்கடையில் அமர்ந்து மக்களிடம் பரப்புரை செய்த காட்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

cm narayanaswamy
author img

By

Published : Oct 10, 2019, 12:38 PM IST

புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் சட்டப்பேரவைத் தொகுதியின் இடைத்தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ், என்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட 9 கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால், காமராஜ் நகர் தொகுதியில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்து வருகிறது.

முதலமைச்சர் நாராயணசாமி தேர்தல் பரப்புரை

இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார், காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணா நகர், எழில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி அப்பகுதியில் உள்ள டீக்கடையில் அமர்ந்து தேநீர் பருகி தேர்தல் பரப்புரை செய்தார்.

அவருடன், மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத், அரசு கொறடா அனந்தராமன், சட்டமன்ற உறுப்பினர் ஜெயமூர்த்தி, திமுக வடக்கு மாநில அமைப்பாளர் சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி நாரா கலைனாதன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

தேர்தல் பரப்புரையின்போது செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, 'இந்தத் தேர்தலோடு என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கானாமல் போய்விடும். கடந்த இடைத்தேர்தலில் அனைத்து தமிழ்நாடு அதிமுக அமைச்சர்கள் இங்கு வந்து முகாமிட்டும் வெற்றி பெறமுடியவில்லை.

வேலை வாய்ப்பு வழங்குவதை வலியுறுத்திதான் இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறோம். கூடிய விரைவில் திமுக தலைவர் ஸ்டாலின், ராஜாஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்கள் தேர்தல் பரப்புரைக்காக வரவுள்ளனர்' என்று தெரிவித்தார்.

Intro:புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியின் கிருஷ்ணா நகரில் முதல்வர் நாராயணசாமி, காங் வேட்பாளர் ஜான் குமாருடன் சேர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்....... அப்போது டீக்கடையில் டீ பருகினார்..
Body:புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியின் கிருஷ்ணா நகரில் முதல்வர் நாராயணசாமி, காங் வேட்பாளர் ஜான் குமாருடன் சேர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்........

புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் வரும் 21ந்தேதி நடைபெறவுள்ளது. இதில் காங், என் ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட 9 கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் காங் வேட்பாளர் ஜான் குமார், கிருஷ்ணா நகர், எழல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக முதல்வர் நாராயணசாமியும் கிருஷ்ணா நகர் தெருக்களில் வீடு வீடாக சென்று காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரித்தார். மேலும் அவர் அங்குள்ள சிறு டீக்கடையில், சிறிது நேரம் அமர்ந்து தேனீர் பருகினார். பின்னர் டிபார்ட்மெண்ட்ல் ஸ்டோர்கள் உள்ளிட்ட இடங்களிலும் கை சின்னத்திற்காக வாக்கு சேகரித்தார். இதுபோன்று மாநில காங் தலைவர் நமச்சிவாயம், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், அகில இந்திய காங் செயலாளர் சஞ்சய் தத், அரசு கொறடா அனந்தராமன், சட்டமன்ற உறுப்பினர் ஜெயமூர்த்தி, திமுக வடக்கு மாநில அமைப்பாளர் சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி நாரா கலைனாதன், புதிய நீதி கட்சியின் தலைவர் பொன்னுரங்கம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கிருஷ்ணா நகர் பகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, இந்த தேர்தலோடு என் ஆர் காங், அதிமுக, பாஜக கட்சிகள் கானாமல் போய்விடும். கடந்த இடைத்தேர்தலில் அனனத்து தமிழக அதிமுக அமைச்சர்கள் வந்து இங்கு முகாமிட்டும் வெற்றி பெறமுடியவில்லை, வேலை வாய்ப்பு வழங்குவதை வலியுறுத்திதான் இந்த தேர்தலை எதிர்கொள்கிறோம், விரைவில் திமுக தலைவர் மு க ஸ்டாலின், ராஜாஸ்தான் முதல்வர் அசோக் கெலட், துணை முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரவுள்ளனர் என்றும் முதல்வர் தெரிவித்தார்...Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.